புதுகை, குளத்தூர் தாலுகா மண்டையூரைச் சேர்ந்த மாரிமுத்து (34) என்பவர் மண்டையூரில் உள்ள தனது வீட்டின் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புதுகை காவல்துறையினர் மாரிமுத்தை கைது செய்து, அவரிடம் இருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.