புதுகை, திருக்கட்டளை அருகே உள்ள மரமில் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ராஜலிங்கம் (52) என்பவர் புதுகையில் உள்ள மதுபான கடை அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அந்த வழியே சோதனையில் ஈடுபட்டிருந்த புதுகை மதுவிலக்கு காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து ராஜலிங்கத்தை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.