புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் அருகே இரட்டிக்குளம் மியூசியம் சாலையில் ராஜேந்திர பிரசாத் (31) என்பவர் கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நிலையில், திருக்கோகர்ணம் போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.