தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதுக்கோட்டை மாவட்டத்தின் மூலம் மாரத்தான் ஓட்டப்போட்டி வருகிற 5-ம் தேதி காலை 7: 00 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கம் வளாகத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் 17 முதல் 25 வயது உட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ தூரம், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ தூரம், 17 முதல் 25 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் போட்டி நடைபெற உள்ளது.