புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட 27வது வார்டில், கீழ ராஜவீதி மற்றும் கீழ மூன்றாம் வீதிகளில் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். கழிவுநீர் வாய்க்கால் புனரமைப்பு மற்றும் சேதமடைந்த சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வின்போது பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.