புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, பெருங்களூர் பகுதியில் குப்பைகளை வண்டியில் ஏற்றி தள்ளிக்கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களைப் பார்த்து காரை விட்டு இறங்கி அவர்களுடன் சேர்ந்து குப்பை வண்டியை தள்ளி உதவி செய்தார். அவரது இந்த செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.