விடுதி மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்திய எம்எல்ஏ!

புதுக்கோட்டை KKC கல்லூரி மாணவிகள் விடுதியில் வழங்கப்படும் உணவு குறித்து கடந்த வாரம் மாணவிகளிடமிருந்து புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து, மாணவியர் விடுதியில் புதுகை எம்எல்ஏ. வை. முத்துராஜா திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவிகளுடன் அமர்ந்து உணவு உண்டார். மேலும் மாணவிகளிடம் குறை நிறைகளை கேட்டறிந்தார். விடுதி காப்பாளரிடம் மாணவிகள் முன்வைத்த கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய அவர் கூறினார்.
