புதுக்கோட்டை காட்டு மாரியம்மன் கோவில் அருகே வசித்து வந்த பஜ்ரங்கள் நிர்வாகி மோகன், வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் வீட்டில் இருந்த மற்றவர்களும் காயமடைந்தனர். குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். திருக்கோகரணம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.