புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கோரமண்டல் உர தொழிற்சாலை சார்பில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன சுகாதார வளாகத்தை இன்று (ஜன. 9) சிவகங்கை எம். பி கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்தார். அவர், அரசு பள்ளி மாணவியை கொண்டு ரிப்பன் வெட்டி கட்டிடத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார். இது பள்ளி மாணவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.