புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அனைத்து அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் குறைகளைக் கேட்டுத் தீர்வு காணும் வகையில், ஜூன் 5ஆம் தேதி ஆட்சியர் மற்றும் திருச்சி மண்டல இணை இயக்குநர் முன்னிலையில் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்களுக்குள்ள பிரச்சனைகளை மனுவாக அளித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.