புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், ஏம்பல், மதுரை செல்லும் சாலையில் ராம் தியேட்டர் பகுதியில் பேருந்துகள் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாவிடம் கோரிக்கை வைத்தனர். அவரது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கு பேருந்து நிறுத்தம் செய்வதற்கான அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி கூறினர்.