புதுக்கோட்டை மாநகராட்சி மாலையீடு சண்முகா நகரில் நேற்று பட்டப்பகலில் ஆளில்லாத வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற வடநாட்டு இளைஞரை அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.