புதுக்கோட்டை அருகே கீரனூர் என்ற இடத்தில் சிறிய விமானம் ஒன்று புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தரையிறங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விமானம் சாலையில் இறங்கியதால், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டுநர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.