அறந்தாங்கியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 70 வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பத்து விழுக்காடு ஓய்வூதியத்தில் கூடுதலாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற சத்துணவு அங்காடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை எனப் பல துறைகளைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.