புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள டாஸ்மாக் விற்பனை மண்டல அலுவலகம் முன்பு, 23 ஆண்டுகள் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,
வாரிசு வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பணியாளரை காலணியால் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.