புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் சாலை, அரசு மகளிர் கலை கல்லூரி சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலைகளில் கனரக லாரிகள் அதிவேகத்துடன் ஒன்றோடு ஒன்று முந்திச் செல்வதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அதிவேகத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.