புதுக்கோட்டை மாவட்டத்தில், மீனவ பட்டதாரிகளைத் தேர்ந்தெடுத்து, குடிமைப்பணித் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, 25.11.2025 தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவித்துள்ளார்.