புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை முதல் செயல்படாது என டாஸ்மாக் தொழிலாளர்களின் போராட்ட நடவடிக்கைக்குழு பொறுப்பாளர் அஜித்குமார் அறிவித்துள்ளார். சிப்காட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊதியம் மற்றும் பணிநிலைகள் தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். அரசு உடனடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.