புதுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயது முருகேஸ்வரி என்ற இளம்பெண் சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினர் அவரது கண், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர். இதன் மூலம் 6 பேருக்கு முருகேஸ்வரி மறுவாழ்வு அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு இறுதி சடங்கின் போது அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.