புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள சாந்தநாதர் சுவாமி ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு நடைபெற்ற தெப்ப திருவிழாவில், அதிர்வெட்டுகள் முழங்க சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, மூன்று சுற்றுகள் குளத்தைச் சுற்றி தெப்பம் வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத இந்த நிகழ்வு நடைபெற்றது.