புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் மற்றும் கள அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 வயது நிரம்பிய, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் டிசம்பர் 3 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 04322-221220 என்ற எண்ணில் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம்.