புதுகை: விருது பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு!

0பார்த்தது
புதுகை: விருது பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு விருது வழங்க மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தேர்வு குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மி போன்ற கலைகளில் திறமை வாய்ந்த கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 முதல் 65 வயதுக்குட்பட்டோர் மார்ச் 30 ஆம் தேதிக்குள் உதவி இயக்குனர், கலை பண்பாட்டு மையம், ஸ்ரீரங்கம், திருச்சி-6 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி