புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் வீரப்பெருமாள் பட்டியைச் சேர்ந்த 17 வயது ராதா, பரம்பூர் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு ஏற்பட்ட தீவிர வயிற்று வலி காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.