புதுக்கோட்டை நகர் பகுதிகளில் போதை மாத்திரைகள் நடமாட்டம் காணப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான 5 லட்சம் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.