புதுகை மாவட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 109 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் புதுகையில் 27, ஆலங்குடியில் 11, திருமயத்தில் 11, அறந்தாங்கியில் 12, விராலிமலையில் 23, கந்தர்வகோட்டையில் 7 என மொத்தம் 91 வேட்பாளர்கள் தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். 109 வேட்பாளர்களில் 91 பேர் டெபாசிட் இழந்த நிலையில், மீதமுள்ள 18 பேர் மட்டுமே தங்களது டெபாசிட்டை திரும்பப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.