புதுக்கோட்டை-சமத்துவபுரம் சாலையில் நாய் பள்ளம் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் குடோனில் மே 26 மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி பிளாஸ்டிக், மரச்சாமான்கள், இரும்புப் பொருட்களை எரித்தது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.