புதுக்கோட்டை, காந்திநகர் ஆறாம் வீதியைச் சேர்ந்த விவேக் (30) என்பவர், தனது வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக மது போதையில் நேற்று தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி ஜோதி (24) அளித்த புகாரின் பேரில் கணேஷ் நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.