புதுகை: பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து

506பார்த்தது
புதுகை: பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து
புதுக்கோட்டை மச்சுவாடி சாலையில் நேற்று, ரேவதி (49) என்பவர் பைக்கில் சென்றபோது, அவரைப் பின்புறமாக அரசு பேருந்து ஓட்டுநர் சிவா (32) மோதியதில் ரேவதிக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது. அவர் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ரேவதியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கணேஷ் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.