புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் அருகே ரங்கம்மாசத்திரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியிலிருந்து மிளகாய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். விபத்தில் சிக்கிய லாரியை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கும் பணி நடைபெற்றது. இந்த விபத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான மிளகாய் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.