புதுக்கோட்டை நகரில், மக்கள் அதிகம் கூடும் சாந்தநாதர் சுவாமி ஆலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மழைநீர் வரத்து வாரிகளில் குப்பைகள் அடைந்து கொசுத்தொல்லைகள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுகாதாரமற்ற சூழல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.