புதுக்கோட்டையில், மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று ஒரு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். உடல் ஊனம் மன ஊனம் அல்ல, மாற்றுத்திறனாளிகள் நாட்டிற்கு ஏராளமாக சாதித்துள்ளனர் என்பதை வலியுறுத்தி இந்தப் பேரணி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பேரங்குளம் மக்கள் மன்றத்தை அடைந்தது.