புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அடுத்த பூங்குடியில், நவம்பர் 8 அன்று குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 11 வயது ஹரிணேஸ்வரன் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து நீரில் மூழ்கினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.