புதுகை, வடகாட்டில் இருந்து கரூரிற்கு டாடா ஏஸ் வாகனத்தில் முருகானந்தம் (40), சந்தோஷ் (18) ஆகிய இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கு பின்னால் அரசு ஸ்டாப் பேருந்தை ஓட்டி வந்த வீரப்பன் (55) மோதியதில் முருகானந்தம், சந்தோஷ் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, புகாரில் திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.