புதுக்கோட்டை சிப்காட் அருகே திருச்சி -புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டி வந்த நபர் பலத்த காயமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து திருக்கோணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.