புதுக்கோட்டை: கார் மோதி விபத்து -2 பேர் கவலைக்கிடம்!

240பார்த்தது
புதுக்கோட்டை: கார் மோதி விபத்து -2 பேர் கவலைக்கிடம்!
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே முத்துடையான் பட்டியிலிருந்து புத்தாம்பூருக்கு நேற்று கணேசன் (40) மற்றும் ராஜா (49) ஆகியோர் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, பின்னால் காரில் வந்த அன்பு செல்வன் (35) என்பவர் ஓட்டிச் சென்ற கார் மோதியதில், கணேசன் மற்றும் ராஜாவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி