புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில், இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளிகளின் பேருந்துகளில் ஆய்வுப் பணி நடைபெற்றது. இதில் சிசிவிடி கேமரா இயக்கம், ஆபத்துக் காலங்களில் தப்பிக்கும் முறைகள், தீயணைப்பு வழிமுறைகள், ஓட்டுநர்-உதவியாளர் கடமைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. தீயணைப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.