புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டப் பணிகளைத் திறப்பு விழா மற்றும் அரசு நல உதவி வழங்கும் விழாவிற்காக தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (நவ. 10) வருகை புரிந்துள்ளார். இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர்.