புதுக்கோட்டை மாவட்டத்தில் 02.08.2025 முதல் தற்போது வரை 39 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இந்த முகாம்களில் 56,614 பேர் பயனடைந்துள்ளனர். முகாம்களில் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், மனநலம் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.