உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் நவம்பர் 21 அன்று மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 10 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் வண்ணப் பென்சில்களைப் பயன்படுத்தியும், 11 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் வாட்டர் கலர் பயன்படுத்தியும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி வண்ணம் தீட்டலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டிகள் மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.