புதுக்கோட்டை: சிதிலமடைந்துள்ள அம்மா உணவக கட்டிடங்கள்

155பார்த்தது
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் மற்றும் ராணியார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவக கட்டிடங்கள் சிதிலமடைந்து, சமையல் உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. இவற்றை விரைவில் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அங்கு பணிபுரியும் பெண்களுக்கு கழிப்பறை வசதி செய்து தரவும் வலியுறுத்தியுள்ளனர். தமிழக முதல்வர் அம்மா உணவகங்களை விரிவாக்கம் செய்ய அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இந்த நிலை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி