புதுக்கோட்டையில் 'என் ஊர் என் கனவு' திட்டத்தின் மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்து பேசினர். இதில் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.