புதுக்கோட்டை அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளராக பழனிவேலை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்தார். இந்நிலையில், அதிமுக அலுவலகம் செல்ல முயன்ற பழனிவேலை சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதுகுறித்து SP அபிஷேக் குப்தாவிடம், காவல்துறை பாதுகாப்புடன் அதிமுக அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கோரி பழனிவேல் புகார் அளித்துள்ளார்.