புதுக்கோட்டையில் அண்ணா சிலை பின்புறம், இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.