புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட போஸ் நகர் பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. இது தொடர்பாக மாமன்ற உறுப்பினர் சுமதி பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று, மாநகராட்சி சார்பில் ஐந்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து, கருத்தடை செய்வதற்காக நாய் பிடிக்கும் வண்டிகளில் ஏற்றினர். இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.