புதுகை: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

5பார்த்தது
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரியும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.