சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் முல்லைத்தீவிற்கு அருகில் கரையை கடந்தது. இதன்காரணமாக, தமிழகத்தில் கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ஜன 12 கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.