புதுக்கோட்டை: நகை கொள்ளை-அதிரடி காட்டிய போலீசார்!

357பார்த்தது
புதுக்கோட்டை அருகே கரூரைச் சேர்ந்த நகை வியாபாரியிடம் இருந்து சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், எஸ்.பி அபிஷேக் குப்தாவின் உத்தரவின்படி, டவுன் டிஎஸ்பி பிருந்தா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு 3 குற்றவாளிகளைக் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளையும் மீட்டனர். இந்த விரைவான நடவடிக்கைக்காக காவல்துறையினரை எஸ்.பி பாராட்டினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி