புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் புதுகை எம். எல். ஏ. வை. முத்துராஜா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மருத்துவர்கள், செவிலியர்கள் பணிகளை பார்வையிட்ட அவர், சிகிச்சை பெறுபவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது திமுக நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பயனாளர்கள் உடனிருந்தனர்.