புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமயம் MLA ரகுபதி, நடிகர்
விஜய் குறித்து விமர்சித்தார். திருச்சியில்
விஜய் நடத்திய கூட்டம் சினிமா சூட்டிங் போல இருந்ததாகவும், அவர் பதவியேற்று இதுவரை எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்றும் கூறினார். சினிமாவில் நடிப்பதை போலவே ஆட்சியிலும் நடிக்கிறார் என்றும், போதையை ஒழிப்பேன் என்று கூறி இதுவரை அதை செய்யவில்லை என்றும் ரகுபதி குற்றம் சாட்டினார். மேலும்,
விஜய் ஒரு அழிக்கும் சக்தி என்றும் அவர் குறிப்பிட்டார்.