புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான சிறிய விமானம் ஒன்று தரையிறங்கியது. இந்த விமானம் சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்றபோது, அதன் முன் பகுதி கழண்டு விழுந்ததால் நிலை தடுமாறி விமானிகள் சாதுர்யத்தால் தரையிறக்கப்பட்டதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.